தமிழகத்தில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று : 448 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 35,873 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 448பேர் உயிரிழந்து உள்ளனர். 25,776 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,231 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 35,873 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 13 பேர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 35,860 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,06,861 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,61,24,748 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,895 பேர் ஆண்கள், 15,978 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 10,74,061 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7,32,762 ஆகவும் அதிகரித்து உள்ளது. 25,776 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,02,537 ஆக உயர்ந்தது.
448 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 169 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 279 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,046 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மாவட்ட வாரியாக விபரம்
மாவட்டம் வாரியாக படுக்கை விவரம்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.