1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உடல்நலம்காக்க பாரம்பரியமான பானைகளில் மொத்தம் 69 வகைகள்

#உடல்நலம்காக்கசெய்தபாரம்பரியமானபண்டையமண்பானைகள்....!!!


பானைகளில் மொத்தம் 69 வகைகள் உண்டு

#பானை= 3 நிறம்

#சிவப்பு= தானியம்/ நீர்/ தினப் பயன்பாடு
#கருப்பு= தயிர்
#வெளிச் சிவப்பு/ உள் கருப்பு= கீரை ஆய்ந்து சேகரிக்க

#அஃகப்பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்

#அஃகுப்பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.

#அகட்டுப்பானை - நடுவிடம் பருத்த பானை

#அடிசிற்பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.

#அடுக்குப்பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.

#அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.

#உசும்பியபானை - உயரம் மிகுந்த பானை.

#உறிப்பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை

#எஃகுப்பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை

#எழுத்துப்பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை

#எழுப்புப்பானை - உயரம் வாய்ந்த பானை

#ஒறுவாயப்பானை - விளிம்பு சிதைந்த பானை

#ஓதப்பானை - ஈரப் பானை

#ஓர்மப்பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை

#ஓரிப்பானை - தனிப் பானை, ஒல்லியான பானை

#ஓவியப்பானை - ஓவியம் வரையப் பெற்ற
 பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை

#கஞ்சிப்பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை

#கட்டப்பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை

#கட்டுப்பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )

#கதிர்ப்பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை

#கரகப்பானை - கரவப்பானை - நீர்க்கரகம்

#கரிப்பானை - கரி பிடித்த பானை

#கருப்புப்பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை

கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை

#கலசப்பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்

#கழுநீர்ப்பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)

காடிப்பானை - கழுநீர்ப் பானை

காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை

குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை

குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை,
 அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)

கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை

கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை
 அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை

கூர்ப் பானை - கூர் முனைப் பானை

கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை

கோளப் பானை - உருண்டு திரண்ட பானை

சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.

சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி

சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை

சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை

சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை

சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை

சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை

சில்லுப் பானை - மிகச் சிறிய பானை

சின்ன பானை - சிறிய பானை

தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)

திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)

திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)

துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று
 அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை

தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை

தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை

தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை

நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை

பச்சைப் பானை - சுடப்பெறாத பானை

படரப்பானை - அகற்ற - பெரிய பானை

பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி

பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)

பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை

மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை

மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை

மிண்டப் பானை - பெரிய பானை

மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை

முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]

முடலைப் பானை - உருண்டையுருவப் பானை

முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)

மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)

மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை

வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்

வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை

வெள்ளாவிப் பானை - துணி
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags