மின் கட்டணம் செலுத்த 31ம் தேதி வரை அவகாசம்
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதமின்றி செலுத்த, 31ம் தேதி வரை, தமிழக மின் வாரியம் அவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல், 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால், இந்த கால கட்டத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர், அபராதம் இன்றி செலுத்த அவகாசம் அளிக்கும்படி, மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி, நம் நாளிதழில் வெளியானது. இதையடுத்து, அபராதமின்றி கட்டணம் செலுத்த, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: தாழ்வழுத்த நுகர்வோர், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள், கடந்த, 10ம் தேதி முதல் வரும், 24ம் தேதி வரை இருக்கலாம். அத்தகையோர், மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி, மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், மின் நுகர்வோருக்கு வழங்கியுள்ள இணையதள வழி வாயிலாக, வலைதள மற்றும் கைபேசி வங்கியியல், 'பேமண்ட் கேட்வே, பாரத் பில் பே' போன்றவற்றின் வாயிலாகவும், பணம் செலுத்தலாம்.

மே மாத கணக்கீட்டு தொகை விபரம், மின் நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும், மின் நுகர்வோர்கள், இந்த விபரங்களை, 'www.tangedco.gov.in' என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.