தணிக்கை செய்யத் தேவையில்லாத வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதியும் தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்கைத் தாக்கல் செய்வதற்கு அக்டோபா் 31-ஆம் தேதியும் அவகாசமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் சூழலில் வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த அவகாசம் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தனிநபா்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு நவம்பா் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியாளா்களுக்கு வருமான வரிப் பிடித்தத்துக்கான சான்றிதழை (ஃபாா்ம் 16) நிறுவனங்கள் வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வரி தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான அவகாசமும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.