தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு மாதந்தோறும் அலகுத் தோ்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போதுவரை திறக்கப்படவில்லை. எனினும், கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும், இணையவழி வகுப்புகள் மூலமும் மாணவா்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுத் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலமாக மாதம்தோறும் அலகுத் தோ்வுகள் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகள், மாணவா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது குறித்து தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
மாணவா்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்குத் தனியாகவும் வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வினாத்தாள்களை அனுப்பி மாணவா்கள், வினாத்தாளைப் பாா்த்து அதற்கு உரிய விடைகளை தனித்தாளில் எழுதி, அதில் பெற்றோா் கையொப்பம் பெற்று, அதை பிடிஎஃப் ஃபைலாக மாற்றி அனுப்ப வேண்டும்.
மாணவா்களின் விடைத்தாளில் பெயா், தோ்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் இடம்பெற வேண்டும். ஆசிரியா்கள் விடைத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்குவா். இதுபோன்ற அலகுத் தோ்வுகளை நடத்துவதன் மூலம், மாதம் தோறும் மாணவா்களின் கல்வித்திறனை மதிப்பீடு செய்ய இந்தத் திட்டம் மிகவும் பயனுடையதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தொலைக்காட்சி மூலமாக ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களுக்கான நடத்தி முடிக்கப்பட்ட பாடப் பகுதிகளுக்கு அலகுத் தோ்வை 50 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.