1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

ஒலிம்பிக் 2020 இன்று ஆரம்பம்- ஒலிம்பிக் -வரலாறும் சிறப்பும்!

 உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் 23.6.2021.
இந்த நாள் ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது? 

ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1948 முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் கடந்த 1894இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 





ஒலிம்பிக் வரலாறு! - பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியை ஒரு விளையாட்டு திருவிழாவாக கருதி கொண்டாடியுள்ளனர் கிரீஸ் நாட்டு மக்கள். அங்கு அமைந்துள்ள ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் தடகள விளையாட்டுகளை முன்வைத்து ஆதிகால ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது. அதோடு மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகளும் நடைபெற்று உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட்டை வழிபட்டனர். இப்படியாக தூவப்பட்ட விதை இன்று விருட்சமாக ‘மாடர்ன் டே’ ஒலிம்பிக் விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைய காலமாக சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. 


1896இல் கிரீஸ் நாட்டின் ஏதன்ஸில் மாடர்ன் டே ஒலிம்பிக்கின் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைத்தது. இதுவரை 31 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 32வது முறையாக டோக்கியோவில் வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் கோடை காலம் மற்றும் குளிர் காலம் என இரண்டு வெர்ஷனாக நடைபெற்று வருகிறது. 

ஐந்து நிறத்தினால் ஆன வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு இருக்கும். இது ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என, உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிக்கும். கொடி வெள்ளை நிறத்தில் எவ்வித 'பார்டரும்' இல்லாதது தான் ஒலிம்பிக் கொடி. இதன் மத்தியில் ஐந்து வளையங்கள் இருக்கும். இதில் உள்ள நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை ஆகிய 6 நிறங்களில் ஏதாவது ஒன்று அனைத்து நாட்டு தேசியக் கொடியிலும் இடம் பெற்றிருக்கும். நவீன ஒலிம்பிக்கின் தந்தை டி கோபர்டின் இதை வடிவமைத்தார்.


லட்சியம்
ஒலிம்பிக்கின் முக்கிய நோக்கம், லட்சியம் என்பது,' போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல; பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும்,' என்கிறார் நிறுவனர் டி கோபர்டின்.


கோட்பாடு
ஒலிம்பிக்கின் அடிப்படை கோட்பாடு,' சைட்டியஸ், அல்டியஸ், பார்டியஸ்'. இது லத்தீன் மொழி வார்த்தைகள். இதற்கான அர்த்தம் விரைவு, உயர்வு, துணிவு.


உறுதிமொழி
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு நட்சத்திரங்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி: ஒலிம்பிக் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, எவ்வித தவறான செயலிலும் ஈடுபடாமல், உண்மையான விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வேன். விளையாட்டின் பெருமையை காப்பதாகவும், நான் சார்ந்த பெருமைப்படுத்துவதாகவும் எனது செயல்பாடுகள் இருக்கும்.


ஜோதி
கிரேக்கர்கள் ஒலிம்பிக் தோன்றிய ஒலிம்பியாட்டில், சூரிய கதிர்கள் மூலம் பாரம்பரிய முறைப்படி ஒலிம்பிக் ஜோதி ஏற்றுவர். இது தான் ஒலிம்பிக் மரபு.



அதிக முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடுகள் வரிசையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இதுவரை அமெரிக்காவில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது.


* இங்கிலாந்தில் 3 முறை (1908, 1948, 2012) நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), ஜெர்மனி (1936, 1972), கிரீஸ் (1896, 2004) நாடுகள் தலா 2 முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தின.


* பெல்ஜியம் (1920), சீனா (2008), கனடா (1976), பின்லாந்து (1952), இத்தாலி (1960), ஜப்பான் (1964), மெக்சிகோ (1968), நெதர்லாந்து (1928), தென் கொரியா (1988), ஸ்பெயின் (1992), சோவியத் யூனியன் ரஷ்யா (1980), சுவீடன் (1912) ,  பிரேசில்  (2016)ஆகிய நாடுகளில் தலா ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது.


ஐந்து நாடுகள்
இங்கிலாந்து, கிரீஸ், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மட்டும் இதுவரை நடந்த அனைத்து (27) ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கம் வென்ற நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

ஒலிம்பிக்கில் இந்தியா! 

இந்தியா கடந்த 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் என 28 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 2000க்கு பிறகு இந்தியா ஒரே ஒரு தங்கம்தான் வென்றுள்ளது. அதை வென்றவர் அபினவ் பிந்த்ரா. அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 16 விளையாட்டு பிரிவுகளில் இந்தியா பங்கேற்க உள்ளது. சுமார் 103 வீரர்கள் இந்த 16 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இந்த முறை இந்தியா அதிகளவில் பதக்கம் வெல்லும் என நம்புவோம். 


இன்றைய கொரோனா சூழலில் உலக மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்வது அவரவர் உடல்நலனை காக்க பெரிதும் உதவும்.
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags