தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, 'ஆல் பாஸ்' நடைமுறையின் பயன், மாற்றுத் திறனாளி தனித்தேர்வர்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பான, 'டிசம்பர் - 3'ஐச் சேர்ந்த தீபக் நாதன் கூறியதாவது: சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மாற்றுத் திறனாளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி வருகின்றனர்.
இது தொடர்பாக, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பான, 'டிசம்பர் - 3'ஐச் சேர்ந்த தீபக் நாதன் கூறியதாவது: சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மாற்றுத் திறனாளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி வருகின்றனர்.
இவர்கள், பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான குறைபாடுகளை உடையவர்கள்; மெல்ல மெல்ல கற்பவர்கள். இவர்கள் எல்லாரும் பல்வேறு சிறப்புப் பள்ளிகளில் படித்து வருபவர்கள். இந்தச் சிறப்புப் பள்ளிகளை, தமிழக கல்வித் துறை அங்கீகரிக்காததால், அவர்கள் தனித் தேர்வர்களாகத் தம்மைப் பதிவு செய்து கொண்டு, தேர்வு எழுதுகின்றனர்.
கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' போடப்பட்டது. இந்த ஆண்டும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு, தனித்தேர்வர்களாக உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கபட வில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில், இந்தச் சிக்கலை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்; தீர்வு கிடைக்கவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் மாணவர்களுக்கே, கொரோனா தொற்று பயத்தால், தேர்வு எழுத வேண்டாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு எழுதச் சொல்வது என்ன நியாயம்?
இம்முறையாவது, தமிழக கல்வித் துறை இந்தப் பாகுபாட்டை நீக்கி, அனைவரையும் உள்ளடக்கிய நல்ல முடிவை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு, 'ஆல் பாஸ்' வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு தீபக் நாதன் கூறினார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.