தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்திற்கான தேசிய விருதுகள் விருதுகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2010ஆம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றல் கொண்டு சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதில் கல்வித்துறை சார்ந்த சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில் நுட்ப கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 6 ஆசிரியர்கள் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள் அதில் அதிகபட்சமாக மூன்று ஆசிரியர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து கவுரவிக்கும் அந்த வகையில் 2018 & 2019 ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 2018ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.* விருது பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் பின்வருமாறு:
1. கணேஷ்
கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. திருவாரூர் மாவட்டம்,
2.மனோகர் சுப்பிரமணியம்
வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
கரூர் மாவட்டம்.
3. தயானந்த்
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. திருப்பூர் மாவட்டம்.
அதேபோல் 2019 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர் .
1.ஜெ. செந்தில் செல்வன்
மாங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி.
சிவகங்கை மாவட்டம்.
2.தங்கராஜா மகாதேவன்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
சேலம் மாவட்டம்.
3.இளவரசன்
வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
சேலம் மாவட்டம் .
ஆகிய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஐசிடி விருது மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழ்ச் செய்திகளை தளத்துடன் இணைந்திருங்கள் நன்றி.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.