CISCE கல்வி வாரியம் நடப்பு ஆண்டிலும் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் 2021-2022 ம் கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை குறைத்து அறிவித்துள்ளது.
CISCE கல்வி வாரியம்:
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடப்பு ஆண்டில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. கல்வி வாரியம் நடப்பு ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உள் மதிப்பீடு மதிப்பெண்கள் மற்றும் கடந்த வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்களை வழங்க இருக்கிறது. மேலும், 2021 -2022ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தையும், கொரோனா பரவல் காரணமாக குறைப்பதாக கல்வி வாரியம் அறிவித்துள்ளது. ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி 2022 தேர்வுகளுக்கான ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளின் பாடத்திட்டத்தை வாரியம் குறைத்துள்ளது. கவுன்சிலானது, ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, உள்ளடக்கத்தின் தரத்தில் சமரசம் செய்யாமல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக CISCE ன் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் அனைத்து இணைந்த பள்ளிகளின் தலைவர்களுக்கும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மாணவர்கள் CISCE – cisce.org இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 2022 தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளின் வரிசைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை கண்டிப்பாக முறைப்படி நடத்த வேண்டும். இது அனைத்து CISCE உடன் இணைந்த பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.