புதிய கல்விக் கொள்கையை விரைந்து அமலாக்க வேண்டும்: மத்தியக் கல்வி அமைச்சர்
புதிய கல்விக் கொள்கை வெறும் ஆவணம் அல்ல. அதுவொரு வழிகாட்டும் தத்துவம் என்று குறிப்பிட்ட மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதை விரைந்து அமலாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மத்தியக் கல்வித்துறை மற்றும் திறன் வளர்ப்புத்துறை அமைச்சர்கள் டெல்லியில் இன்று கூட்டாகச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில், கல்வித்துறை இணை அமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, சுபாஸ் சர்க்கார் மற்றும் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்
இந்நிலையில் சந்திப்பு குறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து புதிய கல்விக் கொள்கை அமலாக்கப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைந்து பணிகளை முடிக்கவும், கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் வலுவான திறன்- கல்வி ஒருங்கிணைப்பை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை என்பது ஒரு ஆவணம் மட்டுமல்ல, நமக்கு வழிகாட்டும் தத்துவமாகும். கல்வியின் முழு அம்சங்களையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கான பார்வையுடன், வருங்காலத் தலைமுறை முழுமையான வளர்ச்சியை எட்ட இந்த கல்விக் கொள்கை உதவும்'' என்று தெரிவித்துள்ளா
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.