திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் எஸ்.ஜோசப் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணி எங்கள் கிராமத்தில் நடந்துவருகிறது. இதற்காக, இங்குள்ள அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்ட பஞ்சாயத்து தலைவர் முடிவு செய்தார்.
அதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் ஏற்கவில்லை. ஏற்கனவே அந்த மைதானத்தில் ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இப்போது கூடுதலாக மற்றொரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டினால், மைதானம் சுருங்கிவிடும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த தொட்டி, சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும் கட்டப்படுகிறது. எனவே, பள்ளி மைதானத்தில் நீர்தேக்கத்தொட்டி கட்டத் தடை விதிக்கவேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் டி.வெங்கடாசலம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘பள்ளி வளாகத்துக்கு வெளியில்தான் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே, பள்ளி மைதானத்துக்குள் நீர்தேக்கத்தொட்டியை கட்டக்கூடாது. இதற்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்குக்கு தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.