பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயார் அமைச்சர்
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயாராக உள்ளதாக, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்து உள்ளார்.அவர் அளித்த பேட்டி:
முதன்மை கல்வி அலுவலர்களுடன், இன்று மாலை, 5:00 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசப்படும். அப்போது, பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடும் முறை, அதற்கு மாவட்ட அளவில், அதிகாரிகளின் தயார் நிலை குறித்து பேசப்படும்.பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயார் நிலையில் உள்ளதை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்.
மதிப்பெண் பட்டியலை முழுமையாக சரிபார்த்து கொள்ளும்படி, அவர் கூறியுள்ளார்.எனவே, மீண்டும் ஒரு முறை மதிப்பெண் பட்டியலை சரிபார்த்த பின், முதல்வரிடம் தெரிவிப்போம். அதன்பின், முதல்வர் ஒப்புதல் அளிக்கும் தேதியில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியாகும்.பள்ளிகள் திறப்பு குறித்து, முழுமையாக ஆய்வு செய்யப்படும் நிலை மை சீரானதும், பள்ளி திறக்கும் தேதி முடிவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.