தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வர் விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% மாக உயர்த்தி கொடுக்கப்படும் என அறிவிப்புகள் வெளியான நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தவிர கூடுதல் சலுகையாக கொடுக்கப்பட்டு வரும் அகவிலைப்படி தொகையானது கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதாவது கொரோனா பேரலை காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆண்டுக்கு 2 முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தொகையானது கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு 28% மாக கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 48,34,000 மத்திய அரசு ஊழியர்களும் 65,26,000 ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். இதற்கிடையில் தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், புதிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நடைமுறையை பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்து அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுப்பார்’ என கூறியுள்ளார். இது தொடர்பாக அரசு ஊழியர் சங்க தலைவர் மு.அன்பரசு கூறுகையில், ‘மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு கணக்கீடுகளை தமிழக அரசு பின்பற்றி வருவதால், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்த்துள்ளோம். இந்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியாகலாம்’ என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.