தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19 ல் வெளியீடு? புதிய தகவல்!
தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்குமான தேர்வுகளையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இவற்றில் 12 ஆம் வகுப்பு மாணவர்களது உயர்கல்விக்காக இறுதி மதிப்பீடுகள் அவசியம் என்பதால், அவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவு செய்தது.
அந்த வகையில் புதிய கல்வியாண்டில் துவக்கத்திற்காக ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் இம்மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து +2 மாணவர்களுக்கு, அவர்கள் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களில் 50% மும், 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 20% மும், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பெற்ற 30% மதிப்பெண்களை வைத்து இறுதி மதிப்பீடுகளை கணக்கிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
இதற்கிடையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள படி ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்னாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 19 ஆம் தேதி அன்று +2 மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.