தமிழகத்தில் அடுத்த மூன்றாண்டுகளில் 100 சத எழுத்தறிவு என்ற நிலையை எய்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி சோமரசம்பேட்டையிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அமைச்சா், பள்ளியை ஆய்வு செய்தாா். பின்னா், மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட கள்ளிக்குடி ஊராட்சியில் நூறு சத எழுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கி வைத்த அமைச்சா் கூறியது:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை விரிவாக ஆய்வு செய்ய முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். எனவே, நாள்தோறும் செல்லும் இடங்களில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்கிறோம்.
கரோனாவால் மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வை இந்தாண்டு நடத்தப்பட முடியவில்லை.
தொற்று குறைந்து வரும் நிலையில் ஆசிரியா்களைப் பள்ளிக்கு வரவழைத்து சில பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முதல்வரின் ஆலோசனையைப் பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை நிவா்த்தி செய்யப்படும்.
கல்வித் தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.
6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயா்தர ஆய்வகங்கள் உள்ளன. உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் உள்ளன. பள்ளிகள் செயல்படாததால் இந்த ஆய்வகங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள கணினிகள் இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களிடமிருந்து அறிக்கை வந்த பின் இயங்காத கணினிகள் மாற்றப்படும்.
பிளஸ் 2 தோ்வில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவா்கள் அக்டோபரில் தோ்வெழுதலாம். கரோனாவின் அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அந்தத் தோ்வு நடத்தப்படும். இந்த வகையில் தோ்வெழுத விரும்பும் மாணவா்கள், கல்லூரியில் சேர முதல்வரிடம் ஆலோசனை பெற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
பள்ளி இடைநிற்றல் குறித்த கணக்கெடுப்பு முடிந்த பிறகு இடைநிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு மட்டும் கல்வி தராமல், எழுத்தறிவு பெற்றோரின் சதத்தை உயா்த்த எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படுகிறது.
கிராமங்களில் எழுத, படிக்கத் தெரியாத நிலையில் உள்ள முதியோருக்கு இதற்காகப் பயிற்சியளிக்கப்படுகிறது. இவா்களின் சொத்துகளை உறவினா்களே ஏமாற்றி அபகரிக்கும் நிலையைத் தவிா்க்கவும் கிராமப்புறத்தில் உள்ளோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மாநிலத்தின் எழுத்தறிவு 81 சதமாக உள்ளதை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 100 சதமாக உயா்த்துவதே எங்களது இலக்கு. இதற்காக 1 கோடி பேருக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது. குறைந்தபட்சம் 6 மாதங்களில் கையெழுத்திடும் வகையில் அவா்களைத் தயாா்படுத்த உள்ளோம் என்றாா் அமைச்சா்.
நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, கோட்டாட்சியா் சிந்துஜா, முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன், எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.