பணியிட நியமனம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்பு பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடக்க வேண்டிய முக்கிய தேர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் தமிழக அரசின் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் நேற்று திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொண்டார்
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் நிலஅளவை பணிகளுக்கு அதிக மாதங்கள் காத்திருக்காமல் உடனடியாக சர்வே செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யவும், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்
மேலும், பட்டா தொடர்பாக தவறுகள் இருந்தால் அந்தந்த சப் கலெக்டர்கள், ஆர்டிஓக்கள் வாரம் ஒரு முறை ஒவ்வொரு தாலுகாவிற்கும் சென்று அந்தக் குறையை தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் நிரப்பப்படாமல் உள்ள வி.ஏ.ஓ பணியிடங்களை விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து 3,000 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கும் நியமனம் விரைவில் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.