நம்பிக்கை! 'ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்தால் தேர்வு பயம் நீங்கும்' .... மாணவர்களுக்கு மனப்பாட சக்தியும் அதிகரிக்கும்....புத்தாக்க பயிற்சி முகாமில் ஆசிரியர்கள்
'மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்தால் அவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்,' என, மதுரையில் நடந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
பாரதீய சிக் ஷான் மண்டல், தேசிய குழந்தைகள்உரிமை பாதுகாப்புகமிஷன், டி.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (டயட்) சார்பில் 'பொது தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது' குறித்து ஆசிரியருக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.திருச்சி பாரதிதாசன் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் இளங்கோ, “மாணவர்களுக்கு ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரித்தால் மனப்பாட சக்தியும் அதிகரிக்கும். அதன்மூலம் தேர்வு அச்சம் குறையும்,” என்றார்.
காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன், “குறைந்த மதிப்பெண் பெற்றாலும் மனஅழுத்தம் இல்லாதமாணவரே அதிகம் சாதிக்கின்றனர். கல்வி மட்டுமே வாழ்க்கை, அதனால் மட்டுமே பொருளீட்ட முடியும் என்பதை தாண்டி வாழ்க்கைக்காக கல்வி, அதை மகிழ்ச்சியாக கற்க வேண்டும் என மாணவர் மனதில் பதிய வைத்தால் தேர்வு பயம் வராது,” என்றார். 'டயட்' முதல்வர்செல்வி, துணை முதல்வர் ராமராஜ், துறை தலைவர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அசோகன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.