இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா நிறுவன (ஐஆர்சிடிசி) தளத்தில் இணையவழி பேருந்து முன்பதிவுகள் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கான முன்பதிவு சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது பேருந்துகள் முன்பதிவு சேவையும் ஐஆர்சிடிசி தளத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி மொபைல் செயலியில் பேருந்து முன்பதிவு செய்வதற்கான பணிகள் மார்ச் முதல் வாரத்தில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்பிறகு, ஐஆர்சிடிசி செயலியிலும் பேருந்து முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.
இந்த சேவைக்காக 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மாநில சாலைப் போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளதாக ஐஆர்சிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.