1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

மாம்பழம்,திராட்சை அல்லது ஆப்பிளா?

மாம்பழம்,திராட்சை அல்லது ஆப்பிளா?

இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, எவரேனும் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், அவரைப் பார்க்கச் செல்பவர்களுக்கு ஞாபகம் வருவது, ஹார்லிக்ஸ் பாட்டிலும், சாத்துக்குடி பழமும் தான். நோயாளிகளுக்கு மட்டும் தான் பழம் என்ற நிலை மாறி, இன்று விதவிதமான பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.\



சில பழங்களின் பெயர்களை உச்சரிக்கவே சிரமமாக உள்ளது. சிலவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளவே, ஒரு வாரம் ஆகிவிடும்! பழங்கள் அவசியம் தானா, தினமும் சாப்பிடாவிட்டால் ஏதேனும் குறைபாடு வருமா என்ற சந்தேகம் பலரிடம் இருக்கிறது. முக்கனிகளான மா, பலா, வாழைக்கு கூட நம் உணவில் பிரதான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.அந்தந்த பருவத்தில், விதையுடன் உள்ள நாட்டுப் பழங்களை மட்டுமே சாப்பிடுவது நல்லது.


பழங்களை முழுமையாக சாப்பிட வேண்டும; உணவிற்கு, 20 நிமிடங்கள் முன் சாப்பிட்டால், செரிமான சக்தி அதிகரிக்கும். உணவிற்கு பதில், பழங்களை மட்டுமே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழத்துடன், பால், சர்க்கரை, தேன் இவற்றை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.ஆப்பிள்குளிர் பிரதேசங்களில், உடல் கதகதப்பை அதிகரிக்க ஆப்பிள் சாப்பிட்டனர். நம் நாட்டிலும் ஊட்டி, சிம்லாவில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது.

மார்கழி, தை மாதங்களில், மாவுச் சத்து உள்ள ஆப்பிளை மட்டும் சாப்பிட வேண்டும்.ஆப்பிளில் இருந்து எடுக்கப்படும் ஆப்பிள் சிடார் வினிகர் இதய நோய்க்கு நல்லது என்றாலும், நம்மைப் போன்ற வெப்ப பூமியில் வாழ்பவருக்கு நல்லது அல்ல. வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும் போது, அரை ஆப்பிளுடன் சிறிது சுக்குப் பொடி சேர்த்து அரைத்து, ஒன்றிரண்டு முறை சாப்பிட்டால் குணமடையும்.திராட்சைஇரு வகை திராட்சையில், விதை உள்ள கறுப்பு திராட்சை நல்லது. இது நுரையீரலுக்கும், இதயத்திற்கும் வலு சேர்க்கும். சித்தா, ஆயுர்வேத மருந்துகளில் திராட்சையில் செய்யப்படும் மருந்துகள் ஏராளம்.அடிக்கடி சளி பிடிப்பவர்கள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள், உடல் மெலிந்தவர்கள் திராட்சை சாப்பிடலாம்; தோல் ஆரோக்கியம், ரத்தத்தை சுத்தம் செய்வது, ரத்த சுழற்சிக்கு திராட்சை நல்லது.கொய்யா பழம்விட்டமின், 'சி' அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்கும்.

இளநீர், வாழைப் பழத்தை விட, பொட்டாசியம் சத்து இதில் அதிகம். உடல் சோர்வு, பொடுகு பிரச்னை, தோல் வறட்சியை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவும். கண் பார்வைக்கு உகந்தது கொய்யா.அன்னாசிஇதில் உள்ள, 90 சதவீதம் தண்ணீர் சத்து செரிமானத்திற்கு உதவும்.

எலும்புக்கு வலிமை தரும் விட்டமின், 'டி' கால்சியம் சத்து அதிகம் உள்ளது. வாரம் இரு முறை சாப்பிடலாம்.பப்பாளிஇதன் காய், கனி, விதை, தோல், இலை அனைத்திலும் மருத்துவ குணம் உள்ளது. கர்ப்பப் பையில் சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்துவதால், கருச்சிதைவை ஏற்படுத்தும். கர்ப்பிணி, பாலுாட்டும் தாய், பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதய நோயாளிகள், துாக்கமின்மையுடன் இருப்பவர்கள் சாப்பிடலாம்.மாம்பழம்இதில் உள்ள பீட்டா கரோட்டின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாங்கொட்டையை பொடித்து, கால் ஸ்பூன் பொடியை நீரில் கலந்து குடித்தால், உஷ்ண பேதி சரியாகும்.நெல்லி கனிவிட்டமின், 'சி' சத்து அதிகம் உடையது. இதை எந்தப் பதத்தில், எதனோடு சேர்த்து சாப்பிட்டாலும், இதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைக்கும். தவிர, ரத்த சுத்தி, மாதவிடாய் பிரச்னைகளுக்கு மாதுளை; நார்ச்சத்து, விட்டமின், 'சி' நிறைந்த சாத்துக்குடி; தினசரி தேவைப்படும் அனைத்து சத்துக்களும் உள்ள நுங்கு; புளிப்பு, இனிப்பு, மிதமான துவர்ப்பு சுவை கொண்ட வில்வம் பழம், வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் முழு தீர்வு தரும்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags