வாட்ஸ்அப் பயனர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த மத்திய ஐ.டி., அமைச்சகம், மே 25-க்குள் விளக்கமளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40 கோடிக்கும் மேல் ஆகும். அதில் 1.5 கோடி மக்கள் வாட்ஸ்அப்பின் வணிக கணக்கை பயன்படுத்தி வருகிறார்கள். இந் நிலையில் கடந்த ஜனவரி அன்று வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதன் மூலம் தனிநபர் உரையாடல்களையும் பார்க்க முடியும் என்ற சர்ச்சை எழுந்தது. ஆனால், தாங்களே நினைத்தால் கூட வாட்ஸ்அப் செய்திகளை படிக்க முடியாது என நிறுவனம் விளக்கமளித்தது. வாட்ஸ்அப் வணிக கணக்குகள் மட்டுமே பேஸ்புக்கின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்றது.
மக்களின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்ட அதன் புதிய தனியுரிமை கொள்கைகள் மே 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இவற்றை ஏற்காவிட்டால் படிப்படியாக வாட்ஸ்அப்பின் செயல்பாடு நிறுத்திக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர். ஆனால் ஒருவரின் கணக்கு அப்படியே இருக்கும். புதிய கொள்கையை ஏற்றால் செயல்படும். இந்நிலையில் புதிய தனியுரிமை கொள்கைகளை திரும்பப்பெறும்படி வாட்ஸ்அப்பிடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அவர்கள் அனுப்பியுள்ள புதிய நோட்டீஸில், “பல இந்திய குடிமக்கள் அன்றாட வாழ்க்கையில் தொடர்புகொள்வதற்கு வாட்ஸ்அப்பை நம்பியிருக்கிறார்கள். நியாயமற்ற விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் இந்திய பயனர்கள் மீது சுமத்துவது சிக்கல் மட்டுமல்ல, பொறுப்பற்றத்தனம். குறிப்பாக ஐரோப்பிய பயனர்களுடன் ஒப்பிடுகையில், நிபந்தனைகள் இந்திய பயனர்களுக்கு எதிராக பாகுபாடாக உள்ளது.” என கூறியுள்ளது. மே 25-க்குள் நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஐரோப்பாவில் பயனர்கள் வாட்ஸ்அப்பின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தாலும் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் நிபந்தனைகளை ஏற்க வேண்டும், இல்லை என்றால் செயலியை விட்டு வெளியேற வேண்டும் என்பதாக வடிவமைத்துள்ளனர். இதனை தற்போதும் அரசு கேள்வி கேட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.