இந்தியா போஸ்டல் பேமன்ட் பேங்க், தனது சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த, 2.75 சதவீத வட்டியை, 2.50 ஆக குறைத்துள்ளது.
இந்திய தபால்துறையின் கீழ், 'இந்தியா போஸ்டல் பேமன்ட் பேங்க்' இயங்குகிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இதில் பயன்பெறுகின்றனர். சாதாரண, அடிப்படை மற்றும் டிஜிட்டல் என மூன்று வகையான சேமிப்பு கணக்குகள் வழங்கப்படுகிறது. இந்த மூன்று சேமிப்பு கணக்குகளுக்கும், 4 சதவீதமாக இருந்த வட்டி கடந்த, 2020 பிப்., 1 முதல், 3.50 சதவீதமாகவும், ஏப்., 1 முதல், 3 சதவீதமாகவும் இந்தியா போஸ்டல் பேமன்ட் பேங்க் குறைத்தது.கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, கடந்த, மே, 1ம் தேதி முதல், வட்டி விகிதம், 2.75 ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக, சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்புத்தொகை ஒரு லட்சம் வரை கொண்ட கணக்குகளுக்கு, 2.75 ஆக இருந்த வட்டி விகிதம், 2.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருப்புத்தொகை, ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை கொண்ட கணக்குகளுக்கு, 2.75 சதவீத வட்டி விகிதமே தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி குறைப்பு, இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக, இந்தியா போஸ்ட்ல் பேமன்ட் வங்கி அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.