திபெத்தில் உள்ள பூமா கேங்டாங் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம்தான் உலகில் உயரமான (கடல் மட்டத்தில் இருந்து 5,373 மீட்டர்) இடத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம்.
சீனாவில்தான் குழந்தைகளுக்கு அதிக வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. அங்கு வாரந்தோறும் 14 மணிநேரம் குழந்தைகள் வீட்டுப்பாடத்துக்காக செலவழிக்கிறார்கள். ரஷ்யாவில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
இத்தாலியில் உள்ள துரின் நகரில், ஒரே ஒரு மாணவருக்காக ஒரு பள்ளிக்கூடம் இயங்குகிறது.
ஈரானில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக பள்ளிகள் உள்ளன. இரு பாலாரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகள் இல்லை.
வங்கதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட மிதக்கும் பள்ளிகள் உள்ளன. இவற்றில் வகுப்புகள் படகுகளில் நடக்கின்றன.
பிரேசில் நாட்டில் காலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கி, மதிய உணவுக்குள் முடிக்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அடிப்படை உரிமையாக இல்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சான் பாப்லோ நகரில், ஒரு பள்ளிக் கட்டிடம், பழைய பாட்டில்களால் கட்டப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள சிட்டி மாண்டேஸ்வரி பள்ளிதான் உலகின் மிகப்பெரிய பள்ளி. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.