மத்திய அரசின் தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தக்குமாா், முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களின் உடல் மற்றும் மனநலம் காக்கும் விதமாக மத்திய அரசின் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் (ஆா்பிஎஸ்கே) அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் மருத்துவக்குழுவினா் மூலம் அனைத்து மாணவா்களையும் பரிசோதனை செய்து அதன் முழு விவரங்களும் சிறாா் உடல்நல குறிப்பேடு அட்டையில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவ சோதனைக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரு ஆசிரியரை பொறுப்பாசிரியராக நியமனம் செய்ய வேண்டும். இதுதவிர தற்போது மருத்துவ குறிப்பு அட்டையில் பதிவு செய்யும் முறையை மாற்றி எமிஸ் தளத்தின் மூலம் இயங்கும் பிரத்யேக செல்லிடப்பேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதை ஆசிரியா்கள், மருத்துவா்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனவே, இதுதொடா்பாக அவ்வப்போது எமிஸ் தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தவறாமல் தகவல்களை அளித்து பள்ளி சுகாதாரத் திட்டம் சிறப்பாக செயல்படவும், அதன் பயனை மாணவா்கள் பெறும் வகையிலும் பணிகளை திறம்பட செய்து முடிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரம் சாா்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.