டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவின் சுமித் அண்டில் முதல்முறை 66.95 மீ. தூரம் வீசினார். இது ஓர் உலக சாதனையாகும். 2-வது முறை அதை விடவும் அதிகத் தூரம் வீசி மற்றொரு உலக சாதனையை நிகழ்த்தினார். 68.08 மீ. இந்தப் போட்டிக்கு முன்பு அதிகபட்சமாக 62.88 மீ. தூரம் மட்டுமே அவர் வீசியிருந்தார். இதனால் அவருடைய இன்றைய ஆட்டத்திறன் அனைவராலும் வெகுவாக ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.
5-வது முயற்சியில் 68.55 மீ. தூரம் எறிந்து மூன்றாவது முறையாக உலக சாதனை படைத்தார். இதையடுத்து இறுதிச்சுற்றின் முடிவில் அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்தியர் சுமித் அண்டில். ஒரே போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து அனைவர் கவனத்தையும் சுமித் அண்டில் ஈர்த்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.