செப்.1ல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. வாரம் ஆறுநாட்கள் செயல்பட அரசு அனுமதித்து வழிகாட்டு முறைகளை வெளியிட்டு உள்ளது.
வருவாய் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் பிறப்பித்த உத்தரவு:பள்ளிகள் ஆறு நாட்களும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் இருக்கும் வகையில் பிரித்து கொள்ள வேண்டும்.இடம் அதிகமாக இருந்தால் கூடுதல் இருக்கைகள் அமைத்துக் கொள்ளலாம். இடம் பற்றாக்குறை இருந்தால் சுழற்சி முறையில் வகுப்பு நடத்த வேண்டும்.
'ஆன்லைன்' வகுப்புகளும் தொடர வேண்டும். வீட்டில் இருந்து வகுப்பில் பங்கேற்க மாணவர்களை அனுமதிக்கலாம். அனைத்து ஆசிரியர்களும் பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அனைத்து இடங்களையும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
வகுப்பறையில் 'சானிடைசர்' வைத்திருக்க வேண்டும். 'பயோமெட்ரிக்' பயன்பாடு வேண்டாம். வருகைப் பதிவேடு பராமரிக்க வேண்டும். பள்ளிகளுக்கு வெளியில் மாணவர்கள் குழுவாக நிற்கக்கூடாது.
திறந்தவெளி சூழல் சரியாக இருந்தால் அங்கு வகுப்பு நடத்தலாம். மாணவர்கள் உள்ளே நுழையவும் வெளியேறவும் தனி வழி ஏற்படுத்த வேண்டும்.பள்ளியிலோ அல்லது அருகாமையிலோ டாக்டர்கள் நர்ஸ்களை தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். விடுதிகளை திறக்கலாம்; சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைத்து உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.