*மகப்பேறு விடுப்பு அரசாணை 84 ம.வ.மே.துறை நாள் 23/08/21 சார்ந்து சில விளக்கங்கள்*
1) மகப்பேறு விடுப்பு *270 நாட்களில் இருந்து 365 நாட்களாக* உயர்த்தப்பட்டுள்ளது
(12 மாதங்கள்)
2) 01.07.2021 முதல் அமலுக்கு வருகிறது...
01.07.21 க்கு பிறகு விடுப்பு எடுப்பவர்களுக்கு 1 ஆண்டு விடுப்பு...
இதில் தான் பலருக்கு சந்தேகம்...
3) 01.07.2021 க்கு முன்பிருந்து
01.07.2021 அன்று விடுப்பில் இருப்பவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்..
4) *தற்போது மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் இந்த அரசாணையை பயன்படுத்திக் கொள்ளலாம்...*
5) 01.07.21 முதல் 23.08.21 வரை 9 மாத மகப்பேறு விடுப்பு முடித்து பணியில் சேர்ந்தவர்கள் இந்த கூடுதல் 3 மாத விடுப்பை பயன்படுத்த இயலாது..
அவர்கள் மருத்துவர் தகுதி சான்றிதழ் அடிப்படையில் தான் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்து இருப்பார்கள்...
எனவே *மீண்டும் மகப்பேறு விடுப்பு வழங்க இயலாது...*
அதே சமயம்... சிலர் 1/7/21 முதல் 23/08/21 வரை 9 மாதம் மகப்பேறு விடுப்பு முடிந்த பிறகும் மருத்துவ காரணங்களுக்காக *விடுப்பில் இருந்தால்* அவர்கள் இந்த 365 நாட்கள் விடுப்பை பயன்படுத்த இயலும்..
6) குழந்தை பிறப்பிற்கு முன் + குழந்தை பிறப்பிற்கு பின் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்...
(குழந்தை பிறந்த தினத்தில் இருந்து விடுப்பு கட்டாயம் துவங்க வேண்டும்)
7) உயிரோடு உள்ள *இரண்டு குழந்தைகள்* வரை இந்த விடுப்பு உண்டு ..
8) *தகுதி காண்* பருவத்தினர்
*தற்காலிக* பணியினர்களுக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு...
09) அதிக நண்பர்களின் ஐயம்-
மனைவி மகப்பேறு விடுப்பு போது *ஆண்களுக்கு விடுப்பு* உண்டா - தமிழக அரசில் அப்படி ஒரு விடுப்பு கிடையாது🙏🏻
10) மகப்பேறு விடுப்பு புதிய அரசாணை- pdf
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.