மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் செயலியாக வளம் வருவது WhatsApp. இதில் உள்ள ட்ரிக்ஸ் குறித்து இந்த பதிவில் காணலாம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக அனைவரும் ஸ்மார்ட்போன் பயனராக மாறி வருகின்றனர். இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் WhatsApp பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
WhatsApp நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்களை வழங்கி வருகிறது. குரூப் வீடியோ கால் வசதி மற்றும் புகைப்படங்களின் குவாலிட்டி செலக்ட் செய்வது போன்ற அப்டேட்களை வழங்கியது. மேலும் ஏராளமான ட்ரிக்ஸ் இதில் உள்ளன.
அதில் ஒன்றாக WhatsApp சேட் திறக்காமல் செய்திகள் படிப்பது எப்படி என்பது குறித்த ட்ரிக்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோம் ஸ்கிரீன் இல் லாங் பிரஸ் செய்தால் மெனு ஒன்று தோன்றும்
அதனை தொடர்ந்து விட்ஜெட்டை க்ளிக் செய்து பின் வாட்ஸ்அப்பிற்கான ஷார்ட்கட் கண்டுபிடிக்க வேண்டும்.
அதில் ‘4 x 1 WhatsApp’ விட்ஜெட்டை க்ளிக் செய்ய வேண்டும்.
அதனை ட்ராக் செய்து ஹோம் ஸ்க்ரீனில் விட வேண்டும். அதன்பின் WhatsApp சேட் களை திறக்காமல் செய்திகளைப் படிக்கலாம். எந்த சேட் களையும் விட்ஜெட்டை கிளிக் செய்வதன் மூலம் பெறலாம். ஒன்பிளஸ் மொபைல் போனில் முயற்சி செய்யப்பட்ட இந்த ட்ரிக் ஆனது அனைத்து மொபைல்களுக்கு பொருந்தும்.
சாம்சங் பயனர்கள் முதலில் வாட்ஸ்அப் விட்ஜெட்டை க்ளிக் செய்து பின்னர் வலது புறமாக ஸ்வைப் செய்யவும். அதன் பிறகு, நீங்கள் பார்க்கும் இரண்டாவது ஸ்லைடு க்ளிக் செய்யவும். நீங்கள் இப்போது ஷேர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். விட்ஜெட் திரையில் தோன்றும். WhatsApp வெப் இல் படிக்க வேண்டிய மெசேஜ் உள்ள சேட் மீது கர்சரை வைப்பதன் மூலம் மெசேஜ் களை எடுக்க முடியும். இந்த முறையை பயன்படுத்தி பழைய மெசேஜ்களை படிக்க முடியாது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.