3 மாவட்டங்களில் புதிய ஐ.டி., பார்க்; அமைச்சர் அறிவிப்பு
‛‛வேலூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஆக.,31) தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்.
* அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும்.
கோவில்களில் திருக்குறள் வகுப்பு
* கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்.
* தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும்
* சிலம்பொலி சு.செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கர வள்ளிநாயகம் மற்றும் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்
* 'வலிமை' என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
* 2 எத்தனால் ஆலைகள் அமைப்பதற்கு முதல்வர் அனுமதியளித்துள்ளார்.
* வெளிச்சந்தையில் நெய்தல் என்ற புதிய வணிக பெயரில் உப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும்.
* வேலூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
* பின்தங்கிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
* தருமபுரி, விருதுநகரில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 46 லட்சம் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* விருதுநகரில் ரூ.400 கோடியில் ஆடை பூங்கா அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும்.
* உப்பளத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மழை கால நிவாரணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
* ராணிப்பேட்டை சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பேட்டையில் தோல் பொருள் பூங்கா 250 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
* அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதி சார்ந்த அறைகலன் உற்பத்தித் தொழில்களை ஏற்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா 1,100 ஏக்கரில் தூக்குக்குடியில் உருவாக்கப்படுகிறது. முதற்கட்டமாக 500 ஏக்கரில் அமையவிருக்கும் இந்த அறைகலன் பூங்கா பணிகளை டிசம்பர் 2021-க்குள் முடித்து, துவக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.