ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பதிலளித்து பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
நியாய விலை கடைகளில் காலியாக உள்ள 3331 விற்பனையாளர்கள் 666 கட்டுநர்கள் காலி பணியிடங்களுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்து 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் விதிகளை பின்பற்றியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மூலம் நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 19 மாவட்டங்களில் 68 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது மேலும் விரிவுபடுத்தப்படும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.