விநாயகர் சதுர்த்தி உள்பட மத விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத விழாக்கள் மற்றும் வழிபாடு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி இல்லை.
வீடுகளில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
தங்களது வீடுகள் அல்லது அருகில் உள்ள நீர் நிலைகளில் தனித் தனியாகச் சென்று விநாயர் சிலைகளை கரைக்க அனுமதி.
சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளாங்கண்ணியில் மரியன்னையின் பிறந்தநாள் விழாவின்போது பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.