உடல் பிரச்னைகள் இல்லாத புத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு சிறந்த வாழ்க்கைமுறை வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அது உங்களிடம்தான் இருக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்.
வழக்கமான வாழ்க்கைமுறையில் ஏற்படும் சிறிய சிறிய மாற்றங்களே உடல்நல, மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
அன்றாடம் நாம் செய்யும் சில செயல்களில் சிறிய மாற்றங்களைச் செய்தாலே சிறந்த வாழ்க்கைமுறையை நாம் பெற முடியும்.
உங்களிடம் உள்ள ஒரு சில கெட்ட பழக்கங்களை கைவிட்டாலே எளிதாக உடல்நலம், மனநலம் மேம்படும். உடல்நலம், மனநலம் சார்ந்த நிபுணர்களை தேடி அலையாமல் சரியான நேரத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருந்து சரியான நேரத்தில் தூங்கினாலே அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
உடல்நலத்தைப் பாதிக்கும் 5 தீய பழக்கங்கள்
தூக்கம்
நீங்கள் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் எரிச்சலாக இருப்பதாக உணர்வீர்கள். முந்தைய இரவு தரமான தூக்கத்தை புறக்கணித்தால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.
சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூங்க வேண்டும். இதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக்கூடாது. அவ்வாறு சரியான தூக்கம் இல்லையென்கிறதால் உங்களுடைய நோயெதிர்ப்பு அமைப்பு, சுவாசம், செரிமானப் பிரச்னை ஏற்படும்.
அதிக இறைச்சி
அதிக இறைச்சியை சாப்பிடுவது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிக இறைச்சி சாப்பிடுவது புகைபிடித்தலுக்குச் சமம் என்கின்றனர்.
இறைச்சியில் புரதம் அதிகம் இருக்கிறது என்று இறைச்சியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து பதிலாக புரதம் நிறைந்த பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் அதனால் எந்த பிரச்னையும் ஏற்படாது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல்
நீங்கள் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுவதும் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தால் உடல் இயக்கமின்றி இருக்கும்.
இதனால் நுரையீரல், மார்பகம் மற்றும் பெருங்குடல் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். இதனால் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் சிறிது நேரம் உடலை அசைத்து வேலையைத் தொடருங்கள்.
தனிமை
தனிமையாக இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. தனிமையில் இருப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்களா. கவலை, மனச்சோர்வு இருந்தால் அதிகமாக நோய்கள் ஏற்படும். எனவே, நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்கள் பேச்சைக் கேட்கும் சில நல்ல நண்பர்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் கடின காலத்தில் கண்டிப்பாக நண்பர்கள் தேவைப்படுவார்கள்.
சூரிய ஒளி
இன்று பலரும் சூரிய ஒளியை நேரடியாக பெறாமல் செயற்கை முறைகளில் தோலை புத்துணர்வு அடையச் செய்கின்றனர்.
சூரிய ஒளி அதிகமாக பட்டால் சருமத்தில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், செயற்கை முறையில் சருமத்தை புத்துணர்வு அடையச் செய்வது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
சூரிய ஒளி சருமத்திற்கு அளவாகத் தேவை என்றும் சூரிய ஒளி உடலில் படாதவர்களுக்குத் தான் புற்றுநோய் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.