Home »
OLYMPIC
» பாராலிம்பிக்: ஒரே நாளில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது
பாராலிம்பிக்: ஒரே நாளில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் 162 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான டேபிள் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினா பட்டேல், சீன வீராங்கனை மியாவோ ஜாங்குக்குவை எதிர்கொண்டார்.
இறுதியாக 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பவினா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதனால் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்தார்.
இன்று (ஆக.,29) நடந்த இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்கை எதிர்கொண்டார் இந்தியாவின் பவினா. இதில், 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை துவக்கி வைத்தார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் 'டி 46-47' பிரிவு பைனலில் இந்தியா சார்பில் நிஷாத் குமார் ('டி-47'), ராம் பால் ('டி-47') பங்கேற்றனர். இதில், ராம் பால், அதிகபட்சமாக 1.94 மீ., தாண்டி 5வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் நிஷாத் குமார், அதிகபட்சமாக 2.06 மீ., உயரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
அமெரிக்காவின் ரோடெரிக் டவுன்சென்ட் ('டி-46'), அதிகபட்சமாக 2.15 மீ., தாண்டி உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றினார். மற்றொரு அமெரிக்க வீரர் தல்லாஸ் வைஸ் ('டி-46') 2.06 மீ., தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார் வினோத்குமார்
|
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.