தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் 50 உதவி அரசு வழக்குரைஞர், கிரேடு- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : தமிழ்நாடு பொது சேவை. வழக்குத் துறை
தேர்வு நிறுவனம்: தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்
பணி: Assistant Public Prosecutor
மொத்த காலியிடங்கள்: 50
தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் பிஎல் பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - ரூ.1,75,500 வழங்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலை, முதன்மைத் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, முதல்நிலைத் தேர்வுக்கு ரூ.100, முதன்மைத் தேர்வுக்கு ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். தெளிவான விவரங்கள் அறிய அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2021
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2021
மேலும் விவரங்களை அறிய www.tnpsc.gov.in அல்லது https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf ZVdJ என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.