1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு-- பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் வழங்கப்பட்ட அறிவுரைகள்*

*உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு--
  பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு*

* பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்  வழங்கப்பட்ட அறிவுரைகள்*



பள்ளிக் கல்வி முதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் :

01.09.2021முதல் அனைத்து வகைப் பள்ளியை திறப்பது தொடர்பாக
அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு சுற்றறிக்கை.

வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலை நாட்கள்

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமே சமூகஇடைவெளிபின்பற்றி அமரவைக்க வேண்டும்.

போதிய இடவசதி இல்லை எனில், 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப் பெறவேண்டும்.

உயர்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும், போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9-ம் வகுப்பு சுழற்சி முறையில் செயல்படவேண்டும்

தனியார் பள்ளிகளில் மட்டும், பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு
தொடர்ந்து இணையவழி (Online Class) வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.

மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் (Mask) அணியவேண்டும்.

மாணவர்கள் வகுப்பறைக்குசெல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி (Sanitizer)/ சோப்புகளைக் கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும்.

பள்ளி வளாகத்தில் அனைவரும் SOPதவறாது பின்பற்ற வேண்டும்.

அனைத்து ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாககோவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

* பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் 01.09.2021 முதல் பள்ளிக்கு தவறாது வருகை புரிய வேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* கோவிட்-19 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்துதடுப்பூசிசெலுத்திக் கொள்ளவேண்டும்.

* கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள், அதற்கான விலக்குகோரும் சான்றினை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநரிடம் பெற்று சமர்ப்பிக்கவேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தப்படுத்த வேண்டும்.

EMIS இணையதளத்தில்ஆசிரியர்களின் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

மருத்துவஉதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதாரநிலைய அலைபேசி எண் (Help Line) உள்ளிட்டவிவரங்கள் தகவல் பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும்.

EMIS விவரங்களை நாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.

மாணவர்களுக்குநாள்தோறும் உடல் வெப்பநிலை கண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.

EMIS இணைய தளத்தில் தடுப்பூசிசெலுத்தியவர்களின் விவரங்கள் தவறாது பதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.

சமூக இடைவெளியை தவறாது கடைபிக்க வேண்டும்.

P.E.T., N.S.S.,
N.C.C.தொடர்பான செயல்பாடுகள் பள்ளி வளாகத்தில் செயல்படுதல் கூடாது.

மாணவர்களுக்கான சமூகஇடைவெளியினை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேண்டும்.

தேவைப்படின் RBSK தொடர்பு கொண்டு சிறப்புமுகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை / ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.

மாணவர்களுக்குதொற்று ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூகஇடைவெளி,

SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டைபெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சத்து மாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

45 நாட்களுக்கு மாணவர்களுக்கான Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகே தடுப்பூசி செலுத்துவதைஉறுதிசெய்யவேண்டும்.

அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்ய உயர் அலுவலர்கள் வருகை தர உள்ளதால், மேற்காணும் அனைத்து தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags