பள்ளிக்கல்வித்துறையில், இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, அடிப்படை கல்வித்தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. இதைவிட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால், அதிகபட்சம் இரு முறை வரை, ஊக்கத்தொகை பெறலாம்.
கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், இந்நடைமுறை பின்பற்றப்பட்டது.கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவத்சலம் கூறுகையில், ''அரசுப்பள்ளிகளில் கடந்த இரு ஆண்டுகளாக, மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கற்பித்தலை வலுப்படுத்த, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, மேல்நிலை வகுப்புகளில் இருப்பது போல, பாடவாரியாக பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.பல பள்ளிகளில், ஒரே ஆசிரியரே அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை கையாள்கிறார். ''ஆசிரியர்கள் கல்வித்தகுதியை உயர்த்தி கொள்ளும் போது வழங்கப்பட்டு வந்த, ஊக்கத்தொகை நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.