வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் 'பிஎச்' எனத் துவங்கும் பதிவு எண்ணை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் போது, அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை, வேறு எந்த மாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் பின், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள் வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் 'பிஎச் - பாரத் தொடர்' (BH - Bharat series) எனத் துவங்கும் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் யாருக்கு பயன்?
இந்த அறிவிப்பின்படி, பிஎச் வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி, இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது இரண்டு மடங்காக விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.