11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம்...படித்துக்கொண்டே தோல்வியடைந்த பாடங்களின் தேர்வை எழுதலாம்..
+1 வகுப்பில் வெற்றிபெறாத மாணவ - மாணவிகள் இந்த ஆண்டு +2 வகுப்புக்கு சேர்ந்து படித்துக்கொண்டே தோல்வியடைந்த பாடங்களின் தேர்வை எழுதலாம்..
தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது என்பதையும் இந்த தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 96.04% பேர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் கோவை முதலிடத்தையும், விருதுநகர் மாவட்டம் 2-ம் இடத்தையும்
கரூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது
இந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களும் 12ஆம் வகுப்பு செல்லலாம் என்றும், 12ஆம் வகுப்பு படித்து கொண்டே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை எழுதலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதனால் 11ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்கள் மீண்டும் 11ஆம் வகுப்பிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும், கல்லூரிகளில் அரியர் போல் 12ஆம் வகுப்பு படித்து கொண்டே 11ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை படித்து தேர்வு எழுதலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.