கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஜூன் முதல் சம்பளம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், தமிழக உயர் கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில், சுழற்சி முறையில், கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதம்தோறும், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.கொரோனா பிரச்னையால், கல்லுாரிகள் திறக்கும் தேதி தள்ளி போயுள்ளது. தேர்வு பணியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், கவுரவ விரிவுரையாளர்கள், ஏப்ரல் முதல் எந்த ஊதியமும் இல்லாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.எனவே, தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஜூன் முதல் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.