சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு , வரும் கல்வியாண்டில், 9 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் மற்றும் இந்தியாவில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பாடதிட்டத்தை குறைக்கும்படி சி.பி.எஸ்.இ.,க்கு அறிவுரை வழங்கப்பட்டது. பாட திட்டம் குறைப்பது தொடர்பாக, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கல்வியாளர்களின், ஆலோசனைகளை தெரிவிக்கும்படி நான் அழைப்பு விடுத்தேன். இதனை ஏற்று ஆயிரகணக்கானோர், தங்களின் ஆலோசனையை தெரிவித்தனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கற்பித்தலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாடதிட்டம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காரணமாக, இந்தியா மற்றும் உலகில் நிலவும் சுகாதார அவசர நிலை காரணமாக, பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆலோசனைக்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.