பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
இதன் மூலமாக கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்ற ஊகத்துக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் இம்மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் தணியாததால் அந்த தேர்வுகள் தொடர்பான தனது வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்யுமாறு, கடந்த மாதம் 25-ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழுவிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகர் ரமேஷ் போக்ரியால் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அவர் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில்,
பல்கலைக்கழகங்களில் சாத்தியக்கூறுகளை பொருத்து வழக்கமான நடைமுறையிலோ, இணையவழியிலோ, அல்லது இரண்டையும் பின்பற்றியோ செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.
இந்தத் தேர்வுகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்தப்படவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
முன்னதாக பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இறுதித் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் மத்திய உயர்கல்வி துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழகங்களின் கல்வி ஆண்டு மற்றும் தேர்வுகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அளித்த வழிகாட்டுதல்களின்படி, இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் இந்த அனுமதியை தொடர்ந்து, பல்கலைக்கழகங்களில் செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.