1 TO 12 TH MATERIALS, NOTES OF LESSON, DIRECTOR/CEO PROCEEDINGS, G.Os, STUDY MATERIALS, GUIDE, EMIS VIDEOS, KALVI NEWS
Learn - Share - Achieve
நம்மோடு சமூகமும் சமூகத்தோடு நாமும் உயர்வோம்

Recent News

கணினி பயிற்றுநர் நிலை ஒன்று தேர்வு முடிவுகளை முழுமையாக வெளியிட கோரிக்கை!

கணினி பயிற்றுநர் நிலை ஒன்று தேர்வு முடிவுகளை முழுமையாக வெளியிட்டு, விரைவில் பணி ஆணை வழங்க வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


இது தொடர்பாக கணினி ஆசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் வெளியான தற்காலிக தேர்வு பட்டியலில், 824க்கு பதிலாக 697 தேர்வர்களின் பெயரே வெளியாகியிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  நிலுவையில் இருக்கும் வழக்குகளை தாமதமாக முடித்து, 117 பணியிடங்கள் தனியாக நிரப்பட்டால், இடஒதுக்கீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வழக்குகளை தாமதமாக முடித்து 117 பணியிடங்கள் தனியாக நிரப்பட்டால், இடஒதுக்கீட்டில் பல்வேறு விதமான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுப்பிரிவில் செல்ல வேண்டியவர்கள் BC/MBC/SC/ST இடஒதுக்கீட்டு பிரிவில் தேர்வாகி, OBCயினரின் இடங்கள் பறி போக வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்வில் இம்மாதிரியான இடஒதுக்கீட்டு சிக்கல்கள் எழுந்து, தற்காலிக பட்டியல் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

 

எனவே வழக்குகளை விரைவாக முடித்து,  117 பணியிடங்களை விடுவித்து திருத்திய முழு பட்டியலை வெளியிட்டு, பணி நியமனத்தை உடனடியாக செய்ய வேண்டும் என கணினி பயிற்றுநர் நிலை ஒன்று தேர்வு எழுதியோர் வலியுறுத்தி உள்ளனர்.

Share:
  • No comments:

    Post a Comment

    ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    குறிப்பு:
    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags