அரசு பள்ளி மாணவர்களுக்கான, 'ஆன்லைன்' இலவச பயிற்சி வகுப்புகள், நாளை துவங்குகின்றன.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், சி.ஏ., எனப்படும், கணக்கு தணிக்கையாளர் பதவியில் சேர, போட்டி தேர்வு எழுத வேண்டும். நான்கு கட்டங்களாக நடத்தப்படும், இந்த தேர்வில் பங்கேற்க, இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., சார்பில், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த வகுப்புகளுக்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த, தென் மண்டல, ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த வகுப்புக்கு, பள்ளிகள் வழியாக, ஏற்கனவே மாணவர் விபரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து, ஆன்லைனில் இலவச பயிற்சி வகுப்புகள், நாளை துவங்க உள்ளன. திங்கள் முதல் சனி வரை, காலை, 8:00 முதல், 11:00 மணி வரையிலும், மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள், sirc.foundation@icai.in என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, தங்கள் சுய விபரங்களை அனுப்பலாம் என, தென் மண்டல ஐ.சி.ஏ.ஐ., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.