தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மருத்துவ குழுவினரே பாராட்டி உள்ளனர். விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவான ஏரி, குளங்களை நிரப்பும், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். பவானியில் இருந்து சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். எஞ்சியுள்ள மாணவர்களும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கும் தேர்வு நடத்திட அரசு தயாராக உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் சேவைகளை போன்று, பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கும் வகையில் தற்போதைய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் உள்ளதால் பெற்றோர்களின் கருத்து அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை பெற்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.