கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முககவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது
இதில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படும் என்றும் இதுகுறித்து ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனையக் கருவிகளில் (பிஓஎஸ்) உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் இலவசமாக முக கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டமானது முதலில் கிராமப்புறங்களில் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படுவது குறித்து, அவரவர் மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்படும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது முககவசங்கள் தொடர்பாகவும் பிஓஎஸ். எந்திரத்தில் உரிய பதிவுகள் செய்தே வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.