வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைந்த பகுதிகளில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, ஜூலை 31 ஆம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பின்பற்ற வேண்டிய மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி,
► இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்கான தடை விலக்கப்படுகிறது.
► ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்களை திறக்கலாம். ஆனால், அரசு அளிக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
► பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை ஆகஸ்ட் 31 வரை தொடரும்.
► அனைத்துப் பகுதிகளிலும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும்.
► வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி.
► நீச்சல் குளங்கள், சினிமா கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள், சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் தவிர மற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இவைகளுக்கு அனுமதி இல்லை.
► கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் தொடரும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தளர்வுகளை அறிவிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம். அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.