தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நடப்பாண்டில், இரண்டு லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பின்பே, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்பது குறித்து, அரசு சிந்திக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆக., 3 முதல், 14 தனியார், 'டிவி' சேனல்கள் மூலம், பாடங்கள் கற்பிக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசு அறிவித்துள்ள, புதிய கல்விக் கொள்கை குறித்து, முதல்வர் தான் நடவடிக்கை மேற்கொள்வார்.
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, முதல்வர் மூலம் அட்டவணை வெளியிடப்படும். தமிழகத்தில், அரசு பள்ளிகளில், நடப்பாண்டு, இரண்டு லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.