சித்த மருத்துவத்தில், கொரோனாவை எவ்வாறு தடுக்கலாம்?கொரோனா நோய் வராமல் தடுக்க, சித்தமருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அதனால்தான் கொரோனாவில் பாதிக்கப்பட்ட, பல நோயாளிகள் குணமாகி வருகின்றனர்.
சித்தமருத்துவத்தில் 'ஆன்டி வைரல் ட்ரக்ஸ்' மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், மூலிகை மருந்துகள் உள்ளன.தரமில்லாத கபசுர நீர் பாக்கெட்டுகள் விற்கப்படுகிறதே...? கபசுரக்குடிநீர் குடிப்பதில் தவறில்லை. அது சரியான மருந்தாக இருக்க வேண்டும். மருந்து கடைகளில் வாங்கும் கபசுரக்குடிநீர் பொடி, அரசு உரிமை பெற்ற (டிரக் லைசென்ஸ்) மருந்து கம்பெனியால் தயாரிக்கப்பட்டதா என, பார்த்து வாங்க வேண்டும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்?இஷ்டம் போல் குடிக்கக் கூடாது. அதிகமானால் வயிறு புண்ணாகி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இரண்டு கப் தண்ணீரில், அரை ஸ்பூன் பவுடர் போட்டு, ஒரு கப் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி, தினமும் ஒரு கப் குடிக்கலாம். காய்ச்சல், சளி இருப்பவர்கள் காலையும், மாலையும் குடிக்கலாம். சித்தமருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
கபசுரக்குடிநீரில் என்ன வகை மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன ?கபசுர பொடி பாரம்பரிய மருத்துவ வகையை சேர்ந்தது. இதில், 15 வகையான மருத்துவ பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்திக்கு மூன்று வகை மருந்துகள், ஆன்டி வைரலுக்கு மூன்று வகை மருந்துகள், உடல் சூடு தணிக்க மூன்று வகை மருந்து என, பல வகை நோய்களுக்கான மூலிகைகள் இதில் சேர்க்கப்படுகின்றன. சூடாகதான் குடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.