தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீடுவீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து முந்தைய மாத மின் கணக்கீட்டுக்கான கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுய கணக்கீடு
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்கள் தாங்களே சுய கணக்கீடு செய்து, அதன்படி கட்டணம் செலுத்தும் வசதியை இந்த மே மாதத்துக்கு மட்டும் மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள கணக்கை புகைப்படம் எடுத்து, வாட்ஸ் அப் அல்லது கடிதம் அல்லது இ-மெயில் வாயிலாக மின்வாரிய உதவி பொறியாளரின் கைபேசி, இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
குறுஞ்செய்தி
அந்த மின்வாரிய உதவி பொறியாளர்களின் எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. இவ்வாறு பொதுமக்கள் சுயமாக கணக்கிட்டு அனுப்பப்படும் விவரங்களை மின்வாரிய அதிகாரிகள் பத்திரமாக பாதுகாப்பார்கள்.அதன்பின் மின் கணக்கீட்டுக்கான கட்டண விவரத்தை சம்பந்தப்பட்ட மின்நுகர்வோருக்கு (பொதுமக்கள்) குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் வாயிலாக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி அனுப்புவார்.
ஆன்லைன் மூலம் கட்டணம்
அதன்பின், பொதுமக்கள் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக அதாவது நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங், பேமென்ட் கேட்வே, பாரத் பில் பே வாயிலாக செலுத்தலாம். அதே நேரம் மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கனவே கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை மின்வாரிய உதவி பொறியாளர்கள் நீக்கிவிடுவார்கள். பொதுமக்கள் சுய கணக்கீட்டு விவரங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ,அவசியம் எழுந்தாலோ கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து மின்வாரிய அலுவலர்கள் கணக்கீடு செய்வார்கள். இத்தகவல்களை சுற்றறிக்கையாக மின்வாரிய அதிகாரிகளுக்கு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக கணக்கு பிரிவு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.