தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தனித்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துணைத்தேர்வுகள் இன்று (ஆகஸ்ட் 6) முதல் துவங்கியுள்ளது.
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாணவர்களுக்கான இறுதி முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்த துணைத்தேர்வுகளை எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 45,654 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது தவிர அரசு வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத 25 மாணவர்களும் இந்த துணைத் தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். அதன் படி இன்று (ஆகஸ்ட் 6) முதல் துவங்கியுள்ள துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தேர்வு துவங்கிய முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 6) தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதையடுத்து மற்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் வரும் நாட்களில் நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் மையங்களில் தனிநபர் இடைவெளி , முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பான் போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று அறிகுறியுடன், அதாவது காய்ச்சல், சளி உடன் வரும் தேர்வர்களுக்கு தனி அறையில் வைத்து தேர்வுகளை எழுத அனுமதி கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை வலியுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.