தமிழக பட்ஜெட்--ஆகஸ்ட் 13ல் தாக்கல்
ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 'அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வேளாண்மைக்கு முதன்முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், 2021 - 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் குறித்து, நிதி அமைச்சர் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆக.,03) ஆலோசனை நடத்தினார். மேலும், இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், பட்ஜெட் தாக்கல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதன் முடிவில், ஆக.,13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபை செயலர் சீனிவாசன் கூறுகையில், ‛வரும் ஆக.,13ம் தேதி தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார்,' என்றார்.
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வரும் 9ம் தேதி சட்டசபையில் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.